யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட வாகைமயில் 2025

499 0

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி, 16.03.25 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது.

யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. டென்மாக், சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும் வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.

அதிக எண்ணிக்கைகளிலான நடனக்கலைஞர்கள் வாகைமயில் போட்டியில் கலந்து கொண்டார்கள். 15.03.25 சனிக்கிழமையன்று மண்டபம் நிறைந்த மக்களுடன் போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுப் போட்டிகள் தொடங்கியது. சனிக்கிழமைக்குரிய போட்டிகள் நிறைவு பெற்றதும் முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட்டது.

16.03.25 ஞயிறு அன்று 9:00 மணிக்கு போட்டிகள் தொடங்கியது. முதலில் மண்மீட்புப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து வணக்கத்துடன் சிறப்பு விருந்தினரை வரவேற்று, தோகை விரித்தாடுவோம், தாளமெடுத்தாடுவோம், வாகைமயில் போட்டியிலே நாங்கள் வாகை சூடுவோம் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் போட்டி வாகைமயில் போட்டி’ என்னும் பாடலோடு சிறப்பு விருந்தினர்கள் அரங்குக்குள் அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து நாட்டுப்பாற்றாளர் ஜெயந்தி கீதபொங்கலன் அவர்களில் திருவுருவப்படத்திற்கு ஈகைசுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு அகவணக்கத்துடன் போட்டிகளுக்குள் நுழைந்தோம். அனைத்துப் போட்டிகளும் நிறைவுபெற்றதும் மண்டபம் நிறைந்த மக்களின் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் மதிப்பளிப்புகளும் வாகை விருதுகளும் வழங்கப்பட்டன.

மதிப்பளிப்புகளையும் விருதுகளையும் வென்றோர் விபரம்
தனிநடனம்
பாலர்பிரிவு
முதலாமிடம்
செல்வி நியோமி நிரோன்சன் ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்
இரண்டாம் இடம்
செல்வி விதுலா சாய்ராம் ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்
செல்வி தியா பிரபாகரன் ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்
ழூன்றாம் இடம்
செல்வி ஷமீரா சந்திரசேகரம் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
செல்வி இனியா மனேகரன் ஆசிரியர் திருமதி தீபனா தர்மபாலன்

வாகைமயில் ஆரம்பப்பிரிவு
செல்வி மிதிலா சந்தோஷ்குமார் ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்
இரண்டாம் இடம்
செல்வி மஹீரா மாயா ஆனந்தராஜா ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
செல்வி அக்ஷ்னா கிருபாகரன் ஆசிரியர் செல்வி ரோசிகா ரவிக்குமார்
மூன்றாம் இடம்
செல்வி சிந்த்யா புலேந்திரன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
செல்வி மகிழ்மதி கார்த்திக் ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்
செல்வி ஹரிணி பிரதீப் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்

வாகைமயில் கீழ்ப்பிரிவு
செல்வி லுய்ஸ் கியாரா பெர்னாண்டடோ ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்
இரண்டாம் இடம்
செல்வி வர்ஷினி ஜெயந்தன் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
செல்வி அச்சுதா கதிர்காமநாதன் ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்
செல்வி தர்மிகா மோகனதாஸ் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
மூன்றாம் இடம்
செல்வி அதிதி சரவணன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்
செல்வி அதுலா சௌந்தரராஜன் ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்
செல்வி ஆரத்யா சண்முகராஜா ஆசிரியர் செல்வி அபிரா தயாபரன்

வாகைமயில் மத்தியபிரிவு
செல்வி ஆராதனா கிருஷ்ணமேனன் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
இரண்டாம் இடம்
செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் ஆசிரியர் திருமதி மைதிலி கஜேந்திரன்
செல்வி சாந்தினி தப்பா ஷேத்ரி ஆசிரியர் திருமதி அமலா அன்ரனி சுரேஷ்குமார்
மூன்றாம் இடம்
செல்வி வக்சிகா அலோசியஸ் ஆசிரியர் செல்வி கயானி லோகேஸ்வரன்
செல்வி விதுஷா சண்முகநாதன் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்

வாகைமயில் மேற்பிரிவு
செல்வி சுருதி சுதர்சன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
இரண்டாம் இடம்
செல்வி ஐலின் றிமமோன்சன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்
செல்வி மதுஷா றஞ்சித் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
மூன்றாம் இடம்
செல்வி திபிஷா ராம்குமார் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்
செல்வி திவ்யா ரவிசந்திரன் ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோஷன்
செல்வி கவிப்பிரியா நடேசகுமார் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

வாகைமயில் அதிமேற்பிரிவு
செல்வி அபிரா ரவீந்திரநாதன் ஆசிரியர் திருமதி யனுஷா பிரதீப்
இரண்டாம் இடம்
செல்வி யனுசா இராசமோகன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
மூன்றாம் இடம்
செல்வி அபர்ணா சிவரூபன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

ஆற்றுகைத்தரம் முடித்த மாணவர்கள்
செல்வி சபிதா தவேநசன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
செல்வி விதுசா நவீன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்

ஆற்றுகைத்தரம் முடித்த ஆசிரியர்கள்
முதலாமிடம்
செல்வன் நிமலன் சத்தியகுமார் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
இரண்டாம் இடம்
அபிரா தயாபரன் ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
மூன்றாம் இடம்
விவேகா மகேந்திரகுமார் ஆசிரியர் திருமதி சாவித்திரி சரவணன்

குழுநடனம் வாகைமயில்
பாலர்பிரிவு
முதலாமிடம்
குழு A1 திருமதி தீபனா தர்மபாலன்
வாகைமயில் ஆரம்பப்பிரிவு
செல்வி சயனா ரஞ்சன் ஆசிரியர் செல்வி ராசிகா ரவிக்குமார்
முதலாமிடம்
குழு B2ஆசிரியர் செல்வி ராசிகா ரவிக்குமார்
இரண்டாம் இடம்
குழு B1ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
மூன்றாம் இடம்
குழு B3 ஆசிரியர் திருமதி யசோதா நிதார்சன்

வாகைமயில் கீழ்ப்பிரிவு
மிதிலா சந்தோஸ்குமார் ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்
முதலாமிடம்
குழு C4ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
இரண்டாம் இடம்
குழு C7 ஆசிரியர் விவேகா மகேந்திரகுமார்
மூன்றாம் இடம்
குழு C3 ஆசிரியர் செல்வி ரோசிகா ரவிக்குமார்

வாகைமயில் மத்தியபிரிவு
தர்மிகா மோகனதாஸ் ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
முதலாமிடம்
குழு D1 ஆசிரியர் திருமதி லாவண்யா நிரோசன்
இரண்டாம் இடம்
குழு D4 ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
மூன்றாம் இடம்
குழு D2 ஆசிரியர் திருமதி மைதிலி கஜேந்திரன்

வாகைமயில் மேற்பிரிவு
பிரியா பப்பரிகாஸ்
ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
முதலாமிடம்
குழு E1 ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
இரண்டாம் இடம்
குழு E3 ஆசிரியர் திருமதி சரண்யா பிரசாந்
மூன்றாம் இடம்
குழு E2 ஆசிரியர் திருமதி சபாஸ்கரன் இதயராணி

வாகைமயில் அதிமேற்பிரிவு
ஆதிகா செல்வராசா ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
முதலாமிடம்
குழு F2 ஆசிரியர் செல்வன் நிமலன் சத்தியகுமார்
குழு F1 ஆசிரியர் திருமதி யனுசா பிரதீப்

ஆற்றுகைத்தரம் முடித்த மாணவர்கள் ஆசிரியர்கள்
முதலாமிடம்
குழு H1 ஆசிரியர் திருமதி றெஜினி சத்தியகுமார்
இரண்டாம் இடம்
குழு H2 ஆசிரியர் திருமதி யசோதா நிதார்சன்