2018ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முகத்தன்மை வீசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்

312 0

2018ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பன்முகத்தன்மை வீசாவிற்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களின் பெறுபேறுகளை www.dvlottery.state.gov எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் தமது பன்முகத்தன்மை விசா விண்ணப்ப நிலையை சரிபார்த்தல் ஊடாக இந்த நிகழ்ச்சி நிரலில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்களா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.