இலங்கைக்கு அடுத்தக் தவணைக்கான கடனை வழங்குவது தொடர்பில் அடுத்த மாதம் மீளாய்வு – சர்வதேச நாணய நிதியம்

245 0

இலங்கைக்கு அடுத்தக் தவணைக்கான கடனை வழங்குவது தொடர்பில் அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மீளாய்வு செய்யவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மூன்றாண்டு கடன் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டிருந்தது.

ஏற்கனவே இரண்டு தவணைகளாக 350 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்து மூன்றாம் தவணையாக 164 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இருந்த போதும் நாணய நிதியத்தின் கோரிக்கை அடிப்படையில், அரசாங்கம் உள்நாட்டு வருமான சட்ட மூலத்தில் திருத்தங்களை செய்வதில் தாமதம் காட்டுவதால் இந்த கடன் வழங்கல் பிற்போடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.