அமெரிக்காவில் ஆசிய வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரர் கைது

314 0

அமெரிக்காவில் ஆசிய நாட்டைச் சேர்ந்த வாலிபரை தாக்கிய வெள்ளைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட ஆசிய வாலிபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அதிபராக வந்த பிறகு அங்கு வெளிநாட்டினர் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டினரை குறிவைத்து தாக்குகிறார்கள். ஏற்கனவே 2 இந்தியர்கள் தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆசிய வாலிபர் ஒருவரை நியூயார்க் நகரில் வெள்ளைக்காரர் ஒருவர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.ஸ்டீபன் சடோஸ்கி (வயது 48) என்ற அந்த நபர், இது வெள்ளைக்காரர்கள் ஆதிக்கம் உள்ள நாடு. நீ ஏன் இங்கு இருக்கிறார், உடனே நாட்டை விட்டு வெளியேறு என்று கூறி ஆசிய வாலிபரின் முகத்தில் ஓங்கி குத்தி இருக்கிறார். பின்னர் அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.

இது தொடர்பாக அந்த வாலிபர் போலீசில் புகார் கொடுத்தார். அதையடுத்து ஸ்டீபன் சடோஸ்கி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட ஆசிய வாலிபர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை.