நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை என ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்;ளார்.
இன்று யாழ்ப்பாணம் நகரில் சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கில் கொல்லப்பட்ட ஊடகவியளாளருக்கான விசாரணைகளை நல்லாட்சி அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் தெற்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளரின் விசாரணையே, அல்லது வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளையே நல்லாட்சி அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என ஊடகவியலாளர் வித்தியாதரன் குற்றஞ்சாட்டினார். அத்துடன் வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் ஒன்றிணைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். தற்போதைய அரசு வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்களை பிரித்தாளும் செயற்பாட்டில் மேற்கொண்டு வருகிறது என சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண ஊடகவியலாளர்களினால் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு அண்மையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடாத்தினர்.
சர்வதேச ஊடகவியலாளர் தின நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர், மாகாணசபை உறுப்பினாகள், வடக்கு மாகாணசபை எதிர்க் கட்சித் தiலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.