நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அணுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இதனிடையே, தற்போதைய அரசாங்கம் பொதுமக்களை பாரிய நெருக்கடிகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
இயற்கை வளங்கள் மற்றும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோல்வியடைய செய்ய எதிர்காலத்தில் ஜே.வி.பி செயற்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.