அருவக்காடு கழிவகற்றும் திட்டத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

234 0

புத்தளம் அருவக்காடு கழிவகற்றும் வேலைத்திட்டத்திற்காக இலங்கையில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மேல் மாகாணத்தில் வியாபித்துள்ள கழிவு பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பணியானது, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவகற்றல் வேலைத்திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டங்களில் புத்தளம் அருவக்காடு கழிவகற்றும் வேலைத்திட்டத்தை செயற்படுத்த வெளிநாட்டு தூதுவர்கள் மூலம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது