மே தின புகையிரத சேவைகள் மூலம் சுமார் 6 இலட்சம் வருமானம்

248 0

மே தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மேற்கொண்ட 2 விசேட ரயில் சேவைகள் மூலம் ரயில்வே திணைக்களத்திற்கு 6 இலட்சத்து 25 ஆயிரத்து 875 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொழும்பு – கண்டி – கொழும்பு வரையிலுமான ரயில் ஒன்றும் குருநாகல் – கொழும்பு – குருநாகல் வரையிலான மற்றுமொரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – கண்டி – கொழும்பு ரயில் மூலம் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 875 ரூபாவும், குருநாகல் – கொழும்பு – குருநாகல் ரயில் மூலம் 2 இலட்சத்து 78ஆயிரம் ரூபாவும் வருமானமாக புகையிரத திணைக்களத்துக்கு கிடைத்துள்ளது.