பாணந்துறையில் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

27 0

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் ஒருவர் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை தெற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் குறித்த வீட்டில் தனது மகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில், இந்த சோதனை நடவடிக்கையின் போது வீட்டினுள் பெண் மாத்திரமே இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் பல்வேறு பிரதேசங்களில் வைத்து திருடப்பட்டவை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.