சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (24.02.2025) மாலை சுவிஸ் நாட்டினை வந்தடைந்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆம் நாளான இன்று (27.02.2025) சுவிஸ் – பேர்ண் மானிலத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. பேர்ணில் இருந்து பிறைவூர்க் மானிலம் நோக்கிப் பயணிக்கிறது.
Video Player
00:00
00:00
Video Player
00:00
00:00