ஈகையர் நினைவு நாள் -பெல்சியம்.

75 0

ஈகையர் நினைவு நாள் 2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா இன வெறி அரசானது ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக படுகொலை செய்த வேளையில் ஐ.நா மனித உரிமை முன்றலில் இனவழிப்பை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி தன்னுடலில் தீ இட்டு ஈகைச்சாவடைந்த ஈகைப்போராளி முருகதாசன் உட்பட ஏனைய ஈகையர்களின் வணக்க நிகழ்வானது உணர்வு பூர்வமாக பெல்சியத்தில் அன்ற்வேற்பன் மானிலத்தில் நினைவு கூறப்பட்டது. 24.02.2025அன்று முதன்மை நிகழ்வுகளுடன் ஆரம்பமான வணக்க நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.