செவ்வந்தியின் தாய் , சகோதரனுக்கு விளக்கமறியல்

29 0

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லையில் சஞ்சீவவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபருக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் இஷார செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (26) உத்தரவிட்டார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறும் மேலும் ஒரு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.