தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

101 0

சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 13.02.2025 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் கடந்த (24.02.2025) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது. அதன் தொடர்ச்சியாக 13 ஆம் நாளான இன்று 25.02.2025) சுவிஸ் நாட்டின் பாசல் மாநிலத்தின் எல்லையில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய ஈருருளிப்பயணம் 75 கிலோ மீற்றர்களை கடந்து சொலத்தூண் மாநிலத்தின் எல்லையில் நிறைவுற்றது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய 14 நாள் போராட்டம் சுவிஸ் நாட்டின் தலைநகரமான பேர்ண் மானிலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.