வறட்சியால் 12,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

22 0

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல பகுதிகளில் உள்ள மக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுமார் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 12,308 பேர் வறட்சியான காலநிலை காணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், எந்த இறப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இதற்கிடையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.