ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் வட்டுவாகல் பாலம்!

40 0

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாளத்தினை புனரமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தவுள்ளது என அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட பலர் நெகிழும் அளவுக்கு தமிழ் மக்களுக்கான சில முக்கிய திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார முன்வைத்திருந்தார்.

அவற்றில் ஒன்றாகவே, ஈழத்தமிழர்களின் இறுதி இனவழிப்பின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வரும் முல்லைத்தீவு – வட்டுவாகல் பாளத்தினை புனரமைப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தது.

இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் பின்னணி குறித்து விரிவாக ஆராய்கின்றது அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு ஊடக நிகழ்சி ஒன்றில் தெரிவிததுள்ளார்.