பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

19 0
‘OnmaxDT’ பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த குற்றச்சாட்டில் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபரான கயான் விக்ரமதிலக்கே என்பவரை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான கயான் விக்ரமதிலக்கே துபாயில் வைத்து குற்றப்புலானாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில், சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.