தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று Landau நகரபிதாவைச் சந்தித்தனர்.

91 0

தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று (21.02.2025)லண்டோ நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,லண்டோ நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டு,திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புச் சார்ந்தும் தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி கிடைக்க யேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய சந்திப்பாக அறவழிப் பயணச் சந்திப்பு அமைந்திருந்தது.தொடர்ந்தும் யேர்மனியின் கார்ல்சூக நகரத்தை நோக்கிய அறவழிப்பயணம் கடுமையான குளிருக்கு மத்தியில் உணர்வெழுச்சியோடுதொடர்கிறது. Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து 35 k.m பயணித்து Karlsruhe நகரபிதாவிற்கான மனு கையளிப்பு இடம்பெற்றது தொடர்ந்து நாளை காலை 9.00 மணிக்கு “France எல்லையை நோக்கி பயணிக்கும்.