பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை (19) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இந்தியாவிலிருந்து இன்றைய தினம் பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.