பண்டாரகமை – கெஸ்பேவ பிரதான வீதியில் கம்மன்பில வாவிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமையிலிருந்து கெஸ்பேவ நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி பண்டாரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.