தனித்தனி நிகழ்ச்சிகளாக த.வெ.க. ஆண்டுவிழா, பொதுக்குழு

52 0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது இடம் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, பொதுக்குழு நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வரும் 26-ந்தேதி த.வெ.க. முதலாம் ஆண்டு விழாவையும் அதன் பின் கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் வரும் 26-ந்தேதி கட்சியின் முதலாம் ஆண்டு விழா மட்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.