மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்

15 0

மியன்மாரில் இணையவழி மோசடி முகாமில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் சீனா மற்றும் தாய்லாந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருவதுடன், கூடிய விரைவில் எஞ்சியுள்ள 14 பேரையும் இலங்கைக்கு அழைத்த வரப்படுவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது.

மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் 56 இலங்கையர்களில்  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அடங்கிய குழுவினர் வேலைவாய்ப்புக்காக தாய்லாந்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மியன்மாரின் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டு சட்டவிரோத சைபர் அடிமைகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதக் குழு, கடத்தப்பட்ட இலங்கையர்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்களை கப்பமாக கோரியிருந்த நிலையில் கடந்த ஆண்டு அவர்களில் சுமார் 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர். எஞ்சிய 56 இலங்கையர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பலர் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறதொரு நிலையில் மியன்மாரில் இணையவழி மோசடி முகாமில் தற்போது எஞ்சியுள்ள 14 இலங்கையர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு நாட்டிற்கு அழைத்துவர உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.