பிரான்ஸில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றுக்குள் பிரவேசித்து பாதிரியார் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், அதற்கு பொறுப்பானவர் என கருதப்படும் இரண்டாமவரும் இனங்காணப்பட்டுள்ளார்.19 வயதான ஆப்டேல் மலிக் பெட்டிட் ஜின் என்பவரே அந்த கொலையாளி என பிரான்ஸ் விசாரணையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த கொலையுடன் தொடர்புடைய முதலாமவர் ஆப்டேல் கேமக்கி என்று அடையாளம் காணப்பட்டிருந்தார்.இவர் பாதுகாப்பு சேவையில் பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இருவரும் தமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என உரிமை கோரியுள்ளனர்.
எனினும் இரண்டாவது கொலையாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள பெடிட் ஜின், கொலையாளி என்பதை தாம் ஏற்றுக்கொள்ளப்பபோவதில்லை என்று அவருடைய தாயார் தெரிவித்துள்ளார்.தமது மகன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்றும் அந்த யேமானிய தாயார் குறிப்பிட்டுள்ளார்.