இந்திய – இலங்கை ராஜதந்திர உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாh.இந்திய உதவியுடனான அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு –காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது.7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியுடன் இந்;த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் சேவை வழங்கவுள்ள இந்த அம்புலன்ஸ சேவையில் இந்தியாவில் பயிற்சி பெற்ற 250 பேர் உள்ளிட்ட 500க்கும் ஆதிகமான மருத்துவ நிபுணர்கள் ஈடுபடவுள்ளனர் இந்த சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் காலி முகத்திடலுக்கு அருகில் லம்போகினி மகிழுந்துகளையும் ஓட்டப்பந்தய வண்டிகளையும் செலுத்தி விபத்துகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் இப்போது இங்கு இந்தியாவின் உதவியுடன் நுண்ணியல் வைத்தியசாலைகள் நடத்தப்படுகின்றன.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பினை வெறும் அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது.இது பொருளாதாரம், தொழில்வாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் விரிவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த நிகழ்வில் தொலைகாணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி இருந்தார்.அவர் கருத்து வெளியிடும் போது, ஐக்கியமானதும், நிலையானதும், செல்வாக்கானதுமான இலங்கையை உருவாக்கவே இந்தியா விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பலருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.