விநியோகத்தர்களுக்கு நிகழ்நிலையில் பணம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

20 0

இந்த ஆண்டு முதல் உணவு விநியோகத்தர்களுக்கு நிகழ்நிலையில் பணம் செலுத்துமாறு திறைசேரி பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

“இந்த ஆண்டு முதல் உணவு வழங்குநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிகழ்நிலை நிதிப் பரிமாற்றம் மட்டுமே நடைபெறும்” என்று குலரத்ன கூறினார்.

“நாங்கள் ஒன்லைன் நிதி பரிமாற்றங்களுக்குச் செல்லும்போது வவுச்சர்களின் பாவனை இருக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.

122 வவுச்சர்களுக்கு ரூ. 80 மில்லியன் பணம் செலுத்துவது தொடர்பாக உண்மையில் நடந்தது என்னவென்றால், விநியோகத்தர்கள் பணம் செலுத்தியதற்கான ஒப்புகைகளை மீள வழங்காதமையே என்று அவர் கூறினார்.

“நாங்கள் வழக்கமாக எங்கள் விநியோகத்தர்களுக்கு காசோலைகளை அனுப்புகிறோம், அவர்கள் முத்திரையிடப்பட்ட வவுச்சர்களில் கையொப்பமிட்டு எங்களுக்குத் திருப்பி அனுப்புகிறார்கள். சப்ளையர்கள் குறிப்பிட்ட 122 வவுச்சர்களை எங்களுக்கு அனுப்பவில்லை. இருப்பினும், காசோலைகள் பெறப்பட்டு, பொருட்கள் உரிய தொகையைப் பெற்றுள்ளன. எனவே, இதில் எந்த மோசடியும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.