சுவிட்சர்லாந்தில் ஒரு வித்தியாசமான வழக்கு

21 0

சுவிட்சர்லாந்தில், பாதிக்கப்பட்ட நபர் இல்லாமலே வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்றுவருகிறது.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், இளம்பெண் ஒருவரை இரண்டுபேர் அடைத்துவைத்து ஒரு நாள் முழுவதும் கொடுமைப்படுத்தி, சீரழித்து, அதை வீடியோவும் எடுத்துள்ளார்கள்.

அவருக்கு மயக்க மருந்து கொடுத்து இந்த கொடுமை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே, நடந்தது எதுவும் அந்தப் பெண்ணுக்கு நினைவில்லை.

குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், Vaud நீதிமன்றம் ஒன்றில், பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், closed door trial என்னும் முறையில் அந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

தனக்கு என்ன நடந்தது என்பதே அந்த இளம்பெண்ணுக்கு நினைவில்லாத நிலையில், விசாரணை என்கிற பெயரில் அவர் முன்னால் அந்த பயங்கரங்களை எல்லாம் மீண்டும் நினைவுபடுத்தவேண்டாம் என்பதற்காக closed door trial முறையில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

அதாவது, அந்தப் பெண் தொடர்புடைய வழக்கு நடைபெறும் நிலையில், அவரை நீதிமன்றத்துக்கே அழைத்துவரவில்லை. அவருக்குத் தெரியாமலே அவர் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

அந்தப் பெண்ணை சீரழித்த அந்த நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என அரசு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்கள்.