எத்தனை கட்சிகள், தலைவர்கள் உருவானாலும் இ.தொ.காவுக்கு இணையாக முடியாது

230 0

இந்த நாட்டில் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிளும் இ.தொ.காவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடுமென மீன் பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இ.தொ.காவின் மேதினம் கினிகத்தேனை நகரில் பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் இன்று (01) நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2020ம் ஆண்டு இந்த நாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புதிய தனி ஆட்சியினை அமைக்கும். இந்த நாட்டில் எத்தனை அரசாங்கம் அமைத்தாலும் ஸ்ரீ சுதந்ததிர கட்சியுடன் தான் ஆறுமுகன் தொண்டமான் இணைந்திருப்பார்.

நாம் ஆறுமுகத்தை கைவிடமாட்டோம். ஆறுமுகனும் எம்மை கைவிடமாட்டார் என்பது உறுதி. எதிர்வரும் காலங்களில் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினூடாக சிறந்த அமைச்சு பதவியொன்று வழங்ப்படும்.

அதே வேளையில் 2020ம் ஆண்டில் தனி ஆட்சியை அமைக்கும் போது மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அமைச்சர் அமைச்சரவை அந்தஸ்துடன் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் தயாராகவுள்ளது.

மலையக மக்களுக்கு சிறப்பான சேவையை செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் பொது ஜன ஐக்கிய முன்னனியும் தான். அந்த வகையில் இ.தொ.கா வை விட சிறந்த கட்சி மலையக மக்களுக்கு எம்முடன் இணைந்து சேவையாற்ற வேறு எந்த கட்சியும் இல்லை என்று மீன் பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.