தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள ஜப்பான் நிறுவனங்களுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் கலந்துரையாடல்

14 0

ஜப்பானில் இருந்துவரும் தொழில் வாய்ப்புக்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் ஜப்பானின் சர்வதேச ஆளணி வழங்குனர் அமைப்பான ஐ.எம் ஜப்பான் நிறுவனத்தின் தலைவர் கனமொரி ஹதோஷி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத், ஜப்பானில் இருக்கும் தொழில் வாய்ப்புக்களுக்காக தகுதியுள்ள தொழிலாளர்களை இணைத்துக்கொள்வதை அதிகரித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அத்துன் எதிர்வரும் காலங்களில் விசேடமாக  ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தொழிலுக்காக எமது நாட்டு தொழில் படையணியை பயிற்றுவிப்பதற்காக குறிதத அமைச்சு மற்றும் அரச தொழில் பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை மிகவும்  விணைத்திரனுடன் மேற்கொள்வதுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்திறனான பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் செவிலியர் சேவை மற்றும் கட்டுமான தொழில் வாய்ப்புக்கள் பல இருக்கின்றன அதற்காக இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக ஐ.எம் ஜப்பான் நிறுவனத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் வாகன சாரதி உள்ளிட்ட மேலும் பல தொழில் வாய்ப்புக்களை இலங்கையர்களுக்காக திறந்துவிடுவதற்கு நடவடிக்கை எடு்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் திறமையான இலங்கை பணியாளர்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.