ராஜீவ்காந்தி கொலை வழக்கு – 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

281 0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் உச்சநீதிமன்றில் மேன்முறையிடு செய்யப்பட்டுள்ள நிலையில் சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதிமன்றில் தாக்கல் மனுவில் 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகின்றதெனவும் விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் இந்த வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றில் இடம்பெற்றுள்ள நிலையில் நீதிபதிகள் காலதாமதம் குறித்து கேள்வி எழுப்பியதுடன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் 4 வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.