வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க தயார் – அமெரிக்க ஜனாதிபதி

228 0

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ப்ளும்பெர்க் செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் செயற்பாடுகள் காரணமாக தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் தக்க தருணத்தில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெளிளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பதற்கு முன்னர் பல நிபந்தனைகளை வடகொரியா நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

தற்போதுள்ள பதற்ற நிலையை போக்க வடகொரியா விரைந்து செயற்பட வேண்டும் எனவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.