மோடிக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணி கறுப்புக் கொடி போராட்டம்

309 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரும் போது, மஹிந்த ஆதரவு அணியினர் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கை வரும் மோடி, அரசாங்கத்துடன் திருகோணமலை எண்ணெய் களஞ்சியம் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

இந்த எண்ணெய் களஞ்சியங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாங்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.