மாவிளக்கு மாவு சாப்பிட்ட 150 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

371 0

201607290939243979_students-hospital-admit-eat-mavilakku-flour_SECVPFமதுரை மாவட்டம் மேலூர் அருகே புலிப்பட்டியில் அரசுப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் திடீரென்று வாந்தி எடுக்க தொடங்கினர். இதில் 15 பேர் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மாணவர்கள் நாககுமார் (வயது11), தீபிகா (12), கீதா (12), அபிராமி (12), அவையம்மாள் (12), செல்வி (12), பொன்னழகு (13), சின்னப்பொண்ணு (13), ஜெயபாரதி (9), முத்துராக்கு (9), அரிகேசவன் (12), ரவிக்குமார் (13), அழகுபாண்டி (13), சிவா (13) ஆகியோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாந்தி-மயக்கம் ஏற்பட்ட மாணவ-மாணவிகள் அனைவரும் வெள்ளி மலைப்பட்டியை சேர்ந்தவர்கள். கோவில் திருவிழாவில் 2 நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மாவிளக்கு மாவை இவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

வாந்தி-மயக்கம் காரணமாக மாணவ-மாணவிகள் 20 பேர் உள்பட 150 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.