மேஜர் பாரதி கலைக்கூடத்தின் பேர்லின் கிளையின் தற்காப்புக்கலைப் பிரிவின் வளர்ச்சி

470 0

யேர்மன் மேஜர் பாரதி கலைக்கூடத்தின் பேர்லின் கிளையின் ஒழுங்கமைப்பில் 2012 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தற்காப்புக்கலைப் பிரிவு யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்துடன் இயங்குவதுடன், அதற்கான இவ்வருட தேர்வு சென்ற வாரம் நடைபெற்றது.இத் தேர்வில் 10 கராத்தே மாணவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பான முறையில் அனைவரும் சித்திபெற்றனர். குறிப்பாக மூன்று மாணவர்கள் பழுப்பு (Braun ) பெல்ட் ருக்கான தேர்வில் சித்திபெற்றது மேஜர் பாரதி கலைக்கூடத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன், சமநேரத்தில் யேர்மன் மக்களின் சமூகத்தில் ஈழத்தமிழர்களின் அடையாளத்தையும், பிரதிநித்துவத்தையும் வெளிப்படுத்திநிற்கின்றது.யேர்மன் கராத்தே சங்கத்தின் சார்பில் Sensei Johannes Köster ( 6 Dan ) அவர்களின் முன்னிலையில் இத் தேர்வு நடைபெற்றது.

1 .5 .2017 அன்றில் இருந்து மேஜர் பாரதி கலைக்கூடத்தின் தற்காப்புக்கலைப் பிரிவு கீழ்க்காணும் புதிய பயிற்சி மண்டபத்தில் வாரம் இரு நாட்கள்( செவ்வாய்க்கிழமை (17 -18 மணிவரை ) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (15 -16 மணிவரை ) நடைபெறும். தற்காப்புக்கலைப் பிரிவில் மாணவர்களினால் பெறப்படும் கட்டணம், பயற்சியறைக்கான செலவுக்கும் மிகுதி தாயகச் சிறுவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Im Kultur- und Ökologiezentrum der UFA Fabrik – Tempelhof
Shi Shi no Dojo Berlin
Viktoriastr. 10 – 18, 12105 Berlin
U-Bahn: U6 Ullsteinstraße
Bus: 170 Tempelhofer Damm/U Ullsteinstraße
தொடர்புகளுக்கு : 03035306634 / 017621751446