கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்;பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 71 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்;த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உழைப்பார்கள் குடும்ப உறுப்பினர்களின் விடுதலையை வலியுறுத்திய வகையில் மே தின நிகழ்வுகள் முன்;னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும்; வகையிலும், இரகசிய சிறைக்கூடங்;கள் விமானத்தாக்குதல்கள், இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னருமான அடக்கு முறைகளை சித்தரிக்கும் ஊர்த்திகள் பேரணியாக, ஏ-9 வீதி வழியாக டிப்போச் சந்தி வரை சென்று அங்கு மே தினக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன் சிவஞானம் சிறிதரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.