சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயார்

425 0

Stephane-Dion-2சிறீலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதன்பின்னர் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.இரண்டு நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களும் இணைந்து செய்தியாளர் சந்திப்பையும் நடாத்தியிருந்தனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி வெளியிட்டார்.

காணாமற் போன செயலகம் மற்றும் காணி விடுவிப்பு போன்ற செயல்களைப் பாராட்டிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இன்னும் அதிகமான விடயங்களை சிறீலங்கா செய்யவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும், நல்லிணக்கச் செயல்முறையில் எல்லா இனம் மற்றும் மதங்களையும் உள்ளடக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.