முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைத்து செயல்படவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை ஜனநாயகப் பாதையில் இணைத்துக்கொண்டு அவர்களின் சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் கடந்த மத்திய குழு கூட்டத்தில் இது தொடரபில் கலந்துரையாடப்பட்டதாகவும் அது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.