வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வு – செல்வம் அடைக்கலநாதன்

255 0
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிபார்த்துத்தான் நாங்கள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றோம். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டம் அம்பாறை ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்திலே எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லை நாங்கள் அடக்கு முறையில் வாழ்ந்து கொண்ட இருக்கின்றோம். இதில் இருந்து நாங்கள் மக்கள் மீண்டெழுவதற்கு எமக்கு தமிழ்த்தேசியக் கூட்டைப்பு மேற் கொள்ள வேண்டும் என மக்கள் ஏங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டம் பலத்த பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் அநியாயம் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து செயற்படாமல் இல்லை.
எமது தமழ்த்தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் ஐயாவின் தலைமையில் அம்பாரை மாவட்டத்தினை ஒதுக்கமாட்டோம், கைவிடமாட்டோம். அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற, தீர்த்துவைக்கின்ற ஒரு பொறிமுறை அடங்காத எந்தவித தீர்வுத்திட்டத்தினையும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்ற செய்தியினை இத்தால் கூறிவைக்க விரும்புகின்றேன்.
நாங்கள் பெற்றுக் கொண்ட எதிர்கட்சி தலைவர் பதவி, என்னுடைய பதிவிகளெல்லாம் அரசுடன் இணைந்து சரணாகதி அரசியல் நடாத்துவதற்கு தந்த சன்மானமாக பலர் சித்தரித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரு பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி எதற்காக வழங்கப்படுகின்றது என்பது கூட இவர்களுக்கு புரியாதுள்ளது. நாங்கள் எந்தவொரு விதத்திலும் அரசுடன் இணைந்து செயற்படவில்லை.
அவர்களிடம் சரணாகதி அரசியலை நாங்கள் நடத்தவில்லை வெளியில் இருந்துதான் நாங்கள் ஆதரவு அளித்துவருகின்றோம். அது மாத்திரமின்றி பாராளுமன்றத்தில் அரசு விடுகின்ற பிழைகள் அனைத்தையும் உடனுக்குடன் சுட்டிகாட்டி வருகின்றோம்.
சர்வேத ரீதியாக எமது பிரச்சினை சம்பந்தமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசும் போது எமது தலைவர் எமது மக்களின் பிர்சினைகளை மிகவும் இறுக்கமாகவும், எந்தவித விட்டுக்கொணடுப்பின்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அரசு அரங்கேற்றுகின்ற பிரச்சினைகள் அனைத்தையும் சுட்டிகாட்டி வருவதனை நான் நன்கு அறிவேன்.
இதனை சம்பந்தன் ஐயாவினை புகழ்வதற்காக கூறுகின்றேன் என்பதாக எவரும் நினைத்துவிட வேண்டாம்.
அண்மையில் காணாமல் பேனோருக்குரிய தீர்வினை பெற்றுக் கொடுப்தற்காக தனியான அலுவலகம் அமைத்து செயற்பட வேண்டும் என்பதனை சுட்டிகாட்டி இருக்கின்றார்.
எங்களில் இருந்து கொண்டு எம்மை எதிரியாக பாரக்கவேண்டாம். எவரும் விமர்ச்சிக்க வேண்டாம்.
எமது மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக மக்களின் நலனை கருத்திற்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக அனைவரும் எம்மோடு இணைந்து செற்படுவதற்காக எவரையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.  தற்காலத்தில் ஒருமித்த குரலில், ஒற்றுமையாக பயணித்து குரல் கொடுக்கின்ற பட்சத்தில்தான் எமது மக்களின் உரிமையை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வினை எதிபார்த்துத்தான் நாங்கள் செயற்பட்டு கொண்டு இருக்கின்றோம். அதிலும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட தமிழர்கள் யாரோடு சேர்ந்து வாழப்போகின்றோம் என்று நினைக்கின்றார்களோ, விருப்புகின்றார்களோ, அவ்வாறான ஒரு தீர்வினை உள்ளடக்கிய தீர்வு திட்டத்தை உறுதிப்படுத்தியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
தீர்வு திட்ட விடயத்திலே அரசு எங்களை ஏமாற்ற நினைக்குமாயின் நாங்கள் அரசில் இருந்து விலகுவோம் என்பதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்