தொழிலாளர் தினமான இன்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது தொழில் புரியும் நிலம் மற்றும் கடல் ஆகியவற்றை கோரி ஒப்பாரி போராட்டமொன்றை இன்று மேற்கொண்டனர்.
இன்று காலை முல்லைத்திவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகம் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வட மாகான சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மக்களுடன் கலந்துகொண்டிருந்தார்.
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று 62 வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து. மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இன்று சர்வதேச தொழிலாளர் தினம், தொழிலாளர்களின் உரிமை வேண்டி போராடும் நாளில், நாம் தொழில் புரியும் இடங்களை இழந்த நிலையில் வாழ்கின்றோம். எனவே எமது தொழில் வாய்ப்புக்களை இழந்து இன்று ஏழரை வருடமாக கஸ்ரப்பட்ட்டு வருகின்ற எமக்கு என்ன தீர்வு. வீதியில் 62 நாளாக போராடியும் தீரவில்லை என கோரி தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து, ஒப்பாரி போராட்டத்தை நடத்தினர்.