மஹியங்கனை – பிபில வீதி விபத்தில் பெண் பலி, 11 பேர் படுகாயம்

356 0

மஹியங்கனை – பிபில வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 12 பேர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், லக்சிரிகம – செவனகல பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பலியானார்.

அத்துடன் காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மொணராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமொலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.