சரத் பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படப்போவதாக வெளியான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அமைச்சரவையில் ஒரு நகைச்சுவையாக பேசப்பட்ட விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஊடகங்களினால் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியாகவே இது பரவியுள்ளது. இது நடைமுறை அரசாங்கத்தை இராணுவ பாணி அரசாங்கமாக காட்ட முயற்சிக்கும் செயலாகும்.
அத்துடன் இந்த விடயம் கோத்தபாய மீண்டும் அதிகாரத்திற்கு வரும் நிலையை போன்றது என்று ஹரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை இன்று நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சியின் மேதின கூட்டத்தையடுத்து அதில் உள்ள பலர் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஹரிசன் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.