மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஆர் சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உரிய தீர்வு ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் மக்களுக்குச் சமர்ப்பிப்போம்.
அதற்காக மக்களின் ஆலோசனைகள் பெறப்படும் என தெரிவித்த அவர், மக்களின் கருத்துக்களுக்கு உட்பட்டே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பல இன மக்கள் வாழ்கின்ற நாட்டில் ஆட்சி ஒழுங்குகள் அதற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தினார்.