யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இ. விக்கேஸ்வரன் தனது பதவிகளை பொறுப்பேற்றுகொண்டார்.
கடந்த வாரம் ஐனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு விக்கேஸ்வரனுக்குரிய நியமனகடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இன்று காலை யாழ் பல்கலை கழக பரமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின்னர் மேளவாத்தியங்களுடன் துணைவேந்தர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட புதிய துணைவேந்தர் காலை 10 .20 மணிக்கு தனது பதவிகளை பொறுப்பேற்று கொண்டார்.