ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்த ஆண்டும் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை கிடைக்கப்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பிரேசில், ஜப்பான், ஜேர்மனி மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
எனினும் இதில் தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்த தீர்மானம் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.