இலங்கையரை விடுவிக்க நடவடிக்கை

392 0

201604200506549240_Sold-state-secrets-and-sentenced-to-death-in-China_SECVPF-350x175மாலைத்தீவின் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை விடுவித்துக் கொள்வதற்கு கூடுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயராக இருப்பதாக, பாகிஸ்தானின் மனித உரிமைகள் குறித்த முன்னாள் அமைச்சர் அன்சார் பார்னி தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் கைதாகியுள்ள இலங்கையரின் குடும்பத்தாரை சந்தித்த வேளையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த இலங்கையர் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அந்த நாட்டின் ஜனாதிபதியை இலக்கு வைத்து ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் மாலபே பகுதியைச் சேர்ந்த லஹிரு மதுசாங்க என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.