தாய்மாரின் ஆளுகையில் உலகம் – மைத்திரி

481 0

maithripala3அதி நவீன தொழில்நுட்ப முன்னேற்றகத்தை கண்டுவரும் உலகம், பெண்களின் ஆளுகைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றமையானது, உலகின் மனிதகுலத்துக்கு ஏற்படுகின்ற அதி உன்னத வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் முக்கிய நாடான ஜேர்மனியில் ஏஞ்சலா மேர்க்கல் என்ற பெண் தலைவராக செயற்படுகிறார்.

தற்போது பிரித்தானியாவின் பிரதமராகவும் தெரேசா மே என்ற பெண் பதவி வகிக்கிறார்.

அமெரிக்காவில் இடம்பெறும் தேர்தலில் ஹிலரி கிளின்டன் வெற்றி பெறுவாராக இருந்தால், குறித்த மூன்று பெண்களும் கைக்கோர்த்து உலகை ஆள முன்வருவார்கள்.

இவ்வாறு உலகம் பெண்களின் ஆளுகைக்கு கீழ் செல்வது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் என்றால் தாய்மார்கள்.

உலகம் தாய்மார்களின் ஆளுகைக்கு கீழ் செல்வது மிகவும் சிறந்தவிடயம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.