கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவராவார்.
மேலும், சந்தேகநபரை இன்று புதன்கிழமை (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.