மறுசீரமைப்பை ஏற்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு மாத்திரம் உரியது இல்லை என்று, சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹெயின்ஸ் வோகர் நெடர்கோர்ன் தெரிவித்துள்ளார்.
இதற்கான பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை – சுவிஸ் ராஜதந்திர உறவுகளின் 60வது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மறுசீரமைப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள இளைஞர்கள் யுத்த சூழ்நிலைக்கு முகம் கொடுக்காமல் வாழ்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையை பயன்படு;தி யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, மீண்டும் அவ்வாறான நிலை ஒன்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.