ஒரே சீனா கொள்கையைத் தொடர அனுமதி

13 0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தைவான் தனது பிரதேசத்தில் பிரிக்க முடியாத பகுதியாகக் கருதப்படுவதைக் கொண்டு, சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கமாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தை அங்கீகரித்து, இந்தக் கொள்கைக்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.