போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதிக தேவைகள் உள்ளது-வவுனியா அரச அதிபர்

255 0
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு அதிக உதவிகள் தேவையாகவுள்ளது. இருப்பினும் உதவி புரிவோர் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளைப் புரியுமாறு மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்னங களின் வாழ்வாதாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தின்  04, பிரதேச செயலகப் பிரிவுகளிலும்  நடை பெற்று முடிந்த யுத்தம் காரணமாக வாழ்க்கைத் துணைவரை இழந்த நிலையில்  994, பெண்களும்  ஏனைய வழிகளால் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நிலையில் 4985, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுமாக மொத்தம் 5979, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொருளாதார ரீதியாக தொழில் முயற்சிகள் இன்றியும் வாழ்கின்றனர்.
இதில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா நகரப் பகுதி பிரதேச செயலக பிரிவில் அதிகூடிய பெண் தலமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு யுத்த சூழ் நிலைகளால் 385,  குடும்பங்களும் மற்றும் ஏனைய வழிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்  3219, குடும்பங்களுமாக மொத்தம் 3604, குடும்பங்கள் வாழ்ந்து உள்ளனர்.
இதேபோன்று வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் யுத்தம் காரணமாக 282, குடும்பங்களும்,  ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில்  690, குடும்பங்களுமாக மொத்தம் 972, குடும்பங்கள் வாழ்ந்து வாழ்கின்றனர்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் யுத்தம் காரணமாக 10, குடும்பங்களும் மற்றும் ஏனைய வழிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்  772, குடும்பங்களுமாக மொத்தம் 782, குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் யுத்தம் காரணமாக 317, குடும்பங்களும் மற்றும்  ஏனைய வழிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்  304, குடும்பங்களுமாக மொத்தம் 621, குடும்பங்களுமாகவே இவ்வாறு வாழ்ந்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கு வாழ் வாதாரத்திற்கான  தொழில் முயற்சிகள் போதிய அளவில் இல்லாது விடினும் முடிந்தவரையில்  ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
இருப்பினும் இவர்களில் அனேகம் பேர் தமது குடும்ப  அங்கத்தவர்களின் கல்வி, மருத்துவம்,  உணவு, உடை,  உட்பட பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் பெரும்  அவல நிலைக்கும் மற்றும் மன உளைச்சலுக்கும்   உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
இதேவேளை இவ்வாறான குடும்பங்களிற்கு சில நிறுவனங்கள் மற்றும் தனியாரும் உதவுகின்றனர். அவ்வாறு உதவி புரிபவர்களும் எம்மால் உதவிய குடும்பங்களிற்கே உதவும் நிலமையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே  இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு   உதவிட விரும்புவோர் வவுனியா மாவட்டச்  செயலகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று எமது செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன்  பாதிக்கப்பட்ட குடுபங்களிடமே நேரடியாக  உதவித் திட்டங்களை கையளிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிலமையினை தவிர்க்க முடியும் அத்துடன் பாதிக்கப்பட்ட சகலருக்கும் உதவும் வாய்ப்பும் ஏற்படும் என்றார்.