கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள் உள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் 25 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
கடந்த ஆண்டு புதிய ஜனநாயக கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ட்ரூடோ பெரும்பான்மையை நிரூபித்தார். இந்த சூழலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரத்தால் பிரதமர் ட்ரூடோவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும், ஆளும் லிபரல் கட்சி யிலும் அவருக்கு எதிராக பல்வேறு எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்பும், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக காய்களை நகர்த்தினார். இந்த சூழலில், ஆளும் லிபரல் கட்சியின் உயர்நிலை கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட் டத்துக்கு முன்பாக நேற்று இரவு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார்.