2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி

14 0
உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதில் புகைப்படம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனாலே அச்சு ஊடகங்களில் புகைப்படங்களினை பிரசுரிக்கும் முறை புகைப்படப் பத்திரிகைக் கலை “Photo Journalism” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிகை புகைப்படத்திற்கான விருது வழங்கப்படுகிறது.

67 ஆவது வருடாந்த உலக பத்திரிகை புகைப்பட விருது வழங்கும் விழாவில், 130 நாடுகளைச் சேர்ந்த 3,851 புகைப்படக் கலைஞர்களின் 61,062 புகைப்படங்கள் பதிவுசெய்யப்பட்டு 31 நிபுணர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நடுவர் குழு வெற்றியாளர்களைத் தெரிவு செய்துள்ளது.

காசாவில் மீளமுடியாத தனிப்பட்ட இழப்பு, மடகாஸ்கரில் குடும்பம் மற்றும் மறதிநோய், மெக்சிக்கோ எல்லையில் குடியேறியவர்கள் மற்றும் உக்ரேனினில் இடம்பெறும் போரின் கீழ் வாழ்க்கை ஆகிய தலைப்பின் கீழ் புகைப்படங்களை எடுத்த 4 பேரை வெற்றியாளர்களாகச் சுயாதீன நடுவர் குழு தெரிவு செய்துள்ளது.

அந்த வெற்றியாளர்களின் புகைப்படங்களைப் பார்வையிட உலகளாவிய ரீதியில் 2024ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் சுவிட்சர்லாந்து, உக்ரேன், இலங்கை, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இலங்கையில் 2024ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்த கண்காட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய இடங்களில் நடைறெவுள்ளது.

கொழும்பில் ஆர்கேட் சுதந்திர சதுக்கத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்டுகளிக்கலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையும், காலியில் மாநகர சபையில் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரையும் பார்வையிடலாம்.

உலகளாவிய நடுவர் குழு தலைவரும், தி கார்டியன் பத்திரிகையின் புகைப்படத் தலைவருமான பியோனா ஷீல்ட்ஸ் வெற்றி பெற்ற புகைப்படங்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில்,

புகைப்படக் கலைஞர்களின் பணி, பெரும்பாலும் அதிக ஆபத்துடனேயே காணப்படுகின்றது. எனினும், மனிதாபிமான தாக்கத்தை உலகுக்குக் காட்ட நினைக்கும் அவர்களின் பணிகளை அங்கீகரிப்பது முக்கியம்.

2024 ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படத்திற்கான விருதை ரொய்ட்டர்ஸின் (Reuters) புகைப்படக் கலைஞரான முஹமட் சலீம் பெற்றுள்ளார். காசா பகுதியில் பாலஸ்தீனப் பெண் ஒருவர், தனது இறந்துபோன, வெள்ளைத் துணி போற்றிய மருமகளை தன் நெஞ்சோடு அணைத்தபடி இருப்பதை புகைப்படம் எடுத்திருந்தார்.

இது மிகவும் ஆழமாக பாதிக்கும் புகைப்படம். அதை பார்த்தவுடன், அது உங்கள் மனதில் ஒருவிதமான கவலையை ஏற்படுத்தும். கற்பனை செய்ய முடியாத இழப்பின் உருவகத்தைக் கண்முன் நிறுத்தியது. இது நிறைய காட்சி சூழலைக் கொண்டிருக்கவில்லை. மோதலின் அச்சம் மற்றும் பயனற்ற தன்மையைப் பற்றிய ஒரு வகையான நேரடியான மற்றும் உருவகச் செய்தியாக இது மிகவும் அடையாளமாகச் செயல்பட உதவும். மேலும் இது அனைத்து வெற்றி படங்களுடனும் சமாதானத்திற்கான நம்பமுடியாத சக்திவாய்ந்த வாதமாகும்.

சிறந்த கதைக்கான விருதினை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லீ-ஆன் ஓல்வேஜ் பெற்றுள்ளார். அந்த கதை மறதி நோயிலுள்ள (dementia) ஒருவரின் குடும்ப வாழ்க்கை பற்றியதாகும். இது உண்மையில் உலகம் முழுவதும் நாங்கள் விளையாட்டாக அறிந்த ஒரு கதை. இது மிகவும் நம்பமுடியாத மென்மையான மற்றும் நெருக்கமான முறையில் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் காதல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் கதை என்பதை நாங்கள் இதைப் பார்க்கும்போது உணர்ந்தோம். புகைப்படக்கலைஞர் உண்மையில் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இது ஒரு நம்பமுடியாத மரியாதைக்குரிய படைப்பாக காணப்படுகின்றது.

நீண்ட கால திட்டங்கள் பிரிவுக்கான விருதினை நியூயோர்க்க டைம்ஸ்ஃப்ளூம்பெர்க் (New York Times/Bloomberg) பத்திரிகையின் புகைப்படக் கலைஞரான வெனிசுவெலாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரோ செகர்ரா பெற்றுள்ளார்.

நீண்ட கால திட்ட விருது வென்றவர் உண்மையிலேயே தனித்துவமான காட்சி மொழியைக் கொண்டுள்ளார். இது நாம் பார்த்த பல திட்டங்களிலிருந்து தனித்து நிற்க உதவியுள்ளது. சில புகைப்படங்கள் மிகவும் விஸ்வரூபமாக இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. புகைப்படக் கலைஞர் அவர் புகைப்படம் எடுக்கும் நபர்களின் காலணியில் நடப்பது போல் உணர்ந்தோம், இது மிகவும் தனித்துவமான அழகியல் மற்றும் நம்பமுடியாத அர்த்தமுள்ள மனிதாபிமான இதழியலை இணைப்பதில் ஒரு உண்மையான மிகவும் திறமையானது என உணரக்கூடியதாக உள்ளது.

திறந்த வடிவமைப்பு பிரிவுக்கான விருதினை உக்ரேனின் ஜூலியா கோச்செடோவாவின் பெற்றுள்ளார். உலக பத்திரிகை புகைப்படத்தில் திறந்த வடிவமைப்பானது ஒரு கதையை மிகவும் விலையுயர்ந்த ஆழமான மற்றும் நுணுக்கமான வழியில் சொல்ல மிகவும் அற்புதமான  வாய்ப்பாகும். இந்தப் புகைப்படங்கள் உக்ரேனில் நடக்கும் போரைப் பற்றியது. உக்ரேனியக் கொடியைப் போன்று நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்டு நம்பமுடியாத ஆற்றல்மிக்க புகைப்படக்கலை அனைத்து கூறுகளையும் புகைப்பட கலைஞர் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு நம்பமுடியாத ஏக்கத்தை ஏற்படுத்துவதாக காணப்படுவதுடன் இது உண்மையில் விரக்தி மற்றும் குழப்பத்தின் உணர்வைத் தருவதாக அமைந்துள்ளது. உக்ரேனில் உள்ள மக்கள் உணர்கிறார்கள். மேலும் இது ஒரு தலைமுறை இளைஞர்கள் குறித்து பேசுவதாக அமைகின்றது என்றார்.